காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில்  பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பீடா வழங்கப்பட்ட நிலையில் 12 வயது சிறுமி ஒருவர் இதனை ஆசையாக வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
இதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ், அதாவது வயிற்றில் துளை என்ற நிலை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.