இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு என்பது அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுவதால் மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த பொருட்களை பெற ரேஷன் கார்டு என்பது அவசியமாகும். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் பயனுடையவும் ரேஷன் கார்டு என்பது அவசியமாகும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை எப்படி சேர்ப்பது என்பது குறித்து இதில் பார்க்கலாம். அதற்கு முதலில் தமிழ்நாடு அரசின் பொது விநியோக துறைக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். ஒருவேளை கடவுச்சொல் மறந்து விட்டால் அதனை மீட்டெடுக்கும் வசதியும் இதில் உள்ளது. பிறகு இணையதள பக்கத்தில் உள்ள மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதை தேர்வு செய்து உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் புதிய உறுப்பினரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, குடும்பத் தலைவருடனான உறவு, ஆதார் எண் போன்ற விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்டு உறுப்பினரை சேர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த செயல்முறை முடிந்த பிறகு ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயர் சேர்க்கப்படும்.