
அர்ஜென்டினா நாட்டில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் 30 மாடி கட்டடத்தில் ஏறிய இளைஞரை மீட்பு குழுவினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அர்ஜென்டினா நாட்டில் இளைஞன் 30 மாடி கட்டடத்தில் ஏற ஆரம்பித்தார். இதனை பார்த்த மக்கள் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதனை கேட்காமல் இந்த வாலிபர் தொடர்ந்து கட்டிடத்தில் ஏறினார். மேலும் அவர் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கட்டிடத்தில் ஏறியதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் அந்த வாலிபரை மீட்டனர். மேலும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.