நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது‌‌. இதன் காரணமாக கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் மஞ்சூரியிலிருந்து 40-க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை 4 குட்டிகளுடன் இருந்த காட்டு யானைகள் கூட்டம் திடீரென வழமறித்தது.

இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மஞ்சூர் கோவை இடையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இக்காட்சிகளை பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் பதிவுசெய்தனர். தற்போது அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானைகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.