உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் ஒரு பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மாதவிடாய். அந்த மாணவி மாதவிடாய் நாளில் பள்ளிக்கு சென்ற நிலையில் ஒரு சானிட்ரி நாப்கின் கேட்டுள்ளார். அந்த மாணவி பள்ளி முதல்வரிடம் நாப்கின் கேட்ட நிலையில் அவரோ வகுப்பறைக்கு வெளியே ஒரு மணி நேரம் நிற்க வைத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை மாவட்ட நீதிமன்றம், மாவட்ட பள்ளி ஆய்வாளர், மாநில மகளிர் ஆணையம் மற்றும் பெண்கள் நலத்துறை ஆகியவற்றிற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரிய பிரச்சினையாக மாறிவிட நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி கொடுத்துள்ளனர்.