
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7575 ஆகவும், ஒரு சவரன் 60 ஆயிரத்து 600 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 103 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 1,03,000 ரூபாயாகவும் இருக்கிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 720 வரையிலும் வெள்ளி கிலோவுக்கு 3000 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.