
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டி20 போட்டியில் இந்தியா வெற்றிக்குப் பிறகு இருவரும் ஓய்வை அறிவித்தனர். இதேபோன்று மீண்டும் இந்தியா வெற்றி பெற்றால் விராட் மற்றும் ரோகித் இருவரும் ஓய்வு அறிவிப்பார்கள். ரோகித் சர்மா ஓய்வு பெறும் பட்சத்தில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதாவது சமீப காலமாக நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் கில் துணை கேப்டனாக செயல்படுகிறார். மேலும் இதன் காரணமாக ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அவர்தான் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.