கடையநல்லூர் தொகுதி மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை மதித்தும், வைகோ மற்றும் தன் மீது களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்கவும் பதவி விலகும் முடிவை எடுக்க வேண்டாம் என்று மதிமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். தனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாகவும், கூட்டணி குறித்து கட்சியும் தலைமையும் எடுக்கும் முடிவை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இப்போதைக்கு அவசரப்படாமல் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பொறுத்திருக்குமாறு நேற்று வைகோவை நேரில் சந்தித்து கண்ணீருடன் முறையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வைகோவிடம் இருந்து இரவில் தனக்குக் கிடைத்த உத்தரவைப் பொதுக்குழுவில் தம்மால் செயல்படுத்த இயலாது என்பதால், அதில் தான் கலந்துகொள்ளவில்லை என்பதை கழகப் பொருளாளர் மூலம் தலைவருக்குத் தெரிவித்துவிட்டதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். 42 ஆண்டுகளாக வைகோ மீது தான் வைத்துள்ள அன்பும் விசுவாசமும் உண்மையானது என்றும், எஞ்சியுள்ள வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்ற தனது கருத்துக்கள் தலைவரின் நலனையும் உள்ளடக்கியது என்றும் அவர் தனது அறிக்கையில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே மற்றொரு எம்எல்ஏவான செந்தில் செல்வம் தான் ஏற்கனவே திமுக கட்சியின் எம்எல்ஏ தான் தான் மதிமுகவில் இல்லை என கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.