வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக மும்பை மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இதனால் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து வேளாங்கண்ணிக்கு வருகின்ற ஆகஸ்ட் 26 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் மறு மார்க்கத்தில் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.