அலுவலகத்தில் வேலை செய்யும் நேரத்தில் மொபைலில் ரீல்ஸ் பார்த்ததற்காக மேல் அதிகாரி ஒருவர் எச்சரித்ததையே காரணமாகக் கொண்டு, அந்த அதிகாரியை மிரட்டிய ஒரு பெண் ஊழியரின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் உள்ள அவரது நடத்தை, பொதுமக்களிடம் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
வீடியோவில், ஒரு பெண் ஊழியர் தனது மேஜையில் அமர்ந்தபடி தனது மொபைல் போனில் ரீல் காண்கிறார். இதைக் கண்ட அந்த அலுவலகத்தின் மூத்த அதிகாரி, அவர் வேலை செய்யுமாறு சொல்லுகிறார். ஆனால் அந்தப் பெண் அதிகாரியை திட்டி , “நீ சிறைக்குப் போவாய். நான் 100க்கு போன் செய்து உன்னை ஜெயிலுக்கு அனுப்புவேன். எஸ்பியையும் எனக்குத் தெரியும். உன் முதுமை முழுவதையும் சிறையில் கழிப்பாய்!” என கூச்சமின்றி மிரட்டுகிறார். அருகில் இருந்த மற்றொரு பெண் ஊழியரும் வேலை செய்யுமாறு கூறினாலும், சம்மந்தப்பட்ட எவரையும் பொருட்படுத்தவில்லை.
Reel देखने में व्यस्त इस लड़की को उसके अधिकारी ने काम के लिए क्या बोल दिया, बेचारे को जेल भेजने की धमकी देने लगी..
नारी शक्ति काफी ज्यादा मात्रा में जाग गई है.. pic.twitter.com/oEMvUof94c
— 𝙼𝚛 𝚃𝚢𝚊𝚐𝚒 (@mktyaggi) July 29, 2025
இந்த வீடியோவை @mktyaggi என்ற X பயனர் பதிவிட்டிருந்தார். “ரீலைப் பார்த்து இருந்த பெண், அதிகாரி வேலை செய்ய சொன்னதற்காக அவரை மிரட்டுகிறார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவைக் கண்ட மக்கள், “இப்படி வேலை செய்யாதவர்களை நீக்குங்கள்” என்றும் மற்றொருவரும், “வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் ஏன் அரசு அலுவலகத்தில் இருக்கிறார்கள்?” என கருத்து தெரிவித்துள்ளனர்.
