இன்றைய காலகட்டத்தில் தவறான ஆதாயம் ஈட்டும் உள்நோக்கத்துடன் பல மோசடிகள் நடைபெற்ற வருகின்றன. சில வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி போலி நியமன கடிதங்களை வழங்கி அதற்கு பணம் செலுத்த வேண்டும் என கேட்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வேலை தேடுபவர்கள் இது போன்ற ஏமாற்று வலைத்தளங்களில் சிக்க வேண்டாம் என்று அஞ்சல் துறை எச்சரித்துள்ளது.

அதாவது இந்திய தபால் துறையின் பெயர் மற்றும் லோகோவை முறைகேடாக பயன்படுத்தி போலி கையோபத்துடன் மோசடி நடைபெறுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் அனைவரும் தேர்வு ஆணைகளில் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா போஸ்ட் நிறுவனம் விண்ணப்பதாரர்கள் வேலை தேடுபவர்கள் ஆகியோரிடம் எந்த வகையிலும் பணம் கேட்கவோ அல்லது பெறவோ இல்லை எனவும் இது போன்ற போலியான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலை தேடுபவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் இது போன்ற போலி கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். நீங்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத சந்தேகத்திற்குரிய அல்லது மோசடியான சலுகைகள் அல்லது நேர்காணல் அழைப்பை பெற்றால் உடனே அஞ்சல் துறைக்கு [email protected] இந்த மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.