இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். பொதுவாக அனைத்து இடங்களிலும்

ஆதார் கார்டை ஆன்லைன் மூலமாக லாக் செய்து பாதுகாக்க முடியும். ஆதார் அட்டையை லாக் செய்வதால் அவர்களது பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் என எதுவும் திருடப்படாது. இதற்கு முதலில் UIDAI ன் https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று எனது ஆதார் என்ற பகுதிக்குள் ஆதார் சேவைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் பூட்டு மற்றும் திறத்தல் என்பதை கிளிக் செய்து UID விருப்பத்தை தேர்வு செய்து ஆதார் எண், முழு பெயர் மற்றும் பின் குறியீட்டை பதிவு செய்து ஓடிபி உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் ஆதார் அட்டை வெற்றிகரமாக லாக் செய்யப்பட்டு விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.