இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் இந்திய ரயில்வே துறை சார்பாக 283 சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிகளின் எண்ணிக்கையை கருதி கூடுதலாக 6000 பெட்டிகள் வரை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பலரும் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்து வருவதால் பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இதனை கருதி கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. அதே சமயம் வந்தே பாரத் போன்ற ஏசி இல்லாத சாதாரண ரயில்களை இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய அறையில் முதல்கட்டமாக மும்பையில் இருந்து டெல்லி வரை இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.