உத்திர பிரதேஷம் மாநிலம் நொய்டாவில் சிவானி குப்தா (27) என்பவர் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி இதனால் இவருக்கு ஏஜென்ஸியின் மூலம் தனியார் வங்கியில் வேலை ஒன்று கிடைத்துள்ளது. இந்நிலையில் வங்கி வேலைக்கு சென்ற சிவானி குப்தா, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் பழகுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியின் மேலாளர்கள் மேலும் இவருக்கு பணிச்சுமை அதிகரித்தனர். இருப்பினும் சிவானி குப்தா தனது வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் சிவானி குப்தாவை அவதூறாக பேசியதுடன், மனநலம் பாதித்தவர் என்றும் கூறியுள்ளனர். இதனால் சிவானி மன அழுத்தத்திற்கு ஆளானார். இந்நிலையில் சென்ற வாரம் வங்கியின் வேலை நேரத்தில் சிவானிக்கும் அங்கு வேலை செய்யும் மற்றொரு பெண்ணிற்கும் சண்டை ஏற்பட்டது. மேலும் சண்டை அதிகரித்த காரணத்தினால் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதுபற்றி தகவல் அறிந்த வங்கியின் மேலாளர்கள் சிவானியை அழைத்து கண்டித்ததுடன் அவரை வேலையில் இருந்து நீக்கியதற்கான மெயில் ஒன்றை அனுப்பினார்.
இதனால் மனமுடைந்த சிவானி காவல்துறையினருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவானி எழுதிய கடிதத்தை ஆய்வு செய்தனர் அதில் ” கடந்த ஆறு மாதங்களாக என்னுடன் பணிபுரியும் ஊழியர்கள் எனக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். இதற்குக் காரணமானவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.