வேலை இல்லாதவர்களுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பதினெட்டு முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு தொழில் துறைக்கு ஒரு லட்சமும் இதர துறைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகின்றது.

குறிப்பாக பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கு குறைந்தபட்சம் எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்கள் அறிய மாவட்ட தொழில் மையம் அல்லது வங்கிகளை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.