
நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 வழங்குகிறது. இந்த pm internship திட்டத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் நவம்பர் 15 வரையில் நீடிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் உடனடியாக வேலையில்லாத பட்டதாரிகள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த திட்டத்தின் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு 500 நிறுவனங்களில் ஒரு வருடம் மத்திய அரசு வேலைவாய்ப்பு வழங்குகிறது.
இந்த திட்டத்திற்கு 10-ம் வகுப்பு, ஐஐடி மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 21 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு அரசு மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை வழங்குகிறது. மேலும் இன்று கடைசி நாள் என்பதால் வேலையில்லாத பட்டதாரிகள் அதாவது திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் pminternship.mca.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.