
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நழிவடைந்த மக்கள் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் ஏராளமான கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலையில்லாதவர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு PM employment generation program என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறார்கள். இந்த கடனில் அதிகபட்சமாக 35 சதவீதம் வரை மானியமாக கிடைக்கும். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் https://kviconline.gov.in/என்ற இணையதளம் மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.