
அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நடிகர் வடிவேலு சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ் மொழிக்கு சின்னதாய் ஒரு ஆபத்து, அது வழக்கம் போல வந்து கொண்டு தான் இருக்கின்றது என நான் சொல்வேன். காக்கா காக்கா மாதிரி தான் கத்துகிறது, அதோட தாய் மொழி அது தான். கிளி கீ கீ என்று அதன் தாய் மொழியில் கத்துகிறது. பசு மாடு அம்மா என்று அதன் தாய் மொழியில் கத்துகிறது.
மாடை போய் நாய் மாதிரி கத்த சொன்னால் எப்படி கத்தும். கிளியை போய் காக்கா போல் கத்த சொன்னால் எப்படி கத்தும். வேண்டாம் விட்டுவிடுங்கள். யார் யார் எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ அதை கற்றுக் கொள்ளட்டும். கட்டாயப்படுத்தாதீங்க, கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மொழி தான் எங்களுடைய சாதாரண வட்டார மொழி. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மொழி எங்கள் தமிழ். திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் எழுதி வைத்துள்ளார். அப்படி வலிமையான மொழியை விட்டுவிட்டு வேறொரு மொழியை திணிக்கவும் வேண்டாம் புகுத்தவும் வேண்டாம் என்று வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.