உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி வழியாகச் சென்ற அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சக பயணி ஒருவருக்கு விற்கப்பட்ட உணவு விலை அதிகம் என்று பயணி ஒருவர் கூறியதால், உணவு விற்பனையாளர் (Vendor) அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த விற்பனையாளர் பெல்ட்டைக் (Belt) கொண்டு பயணியைத் கொடுமையாகத் தாக்கியுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பயணியான நிஹால் (பீனாவைச் சேர்ந்தவர்) ரயிலில் சைவத் தாளி (Veg Thali) ஆர்டர் செய்துள்ளார். ரயில்வே மெனுப்படி அதன் விலை 110 ரூபாய் ஆக இருக்க, அந்த விற்பனையாளர் 130 ரூபாய் கேட்டிருக்கிறார். இதற்கு நிஹால் எதிர்ப்பு தெரிவித்தபோது, விற்பனையாளர் தகாத வார்த்தைகளைப் பேசியதோடு, பெல்ட்டை எடுத்து சரமாரியாக அடித்துள்ளார்.
झांसी में ट्रेन वेंडर ने महंगा खाना देने के विरोध पर यात्री निहाल को बेल्ट से बेरहमी से पीटा
◆ पीड़ित युवक गिड़गिड़ाता रहा, लेकिन वेंडर और उसके साथियों ने लात-घूंसे और बेल्ट से पिटाई जारी रखी
◆ बोगी में मौजूद लोगों ने बीचबचाव कर उसे बचाया, अब रेलवे ने मामले की जांच शुरू की है… pic.twitter.com/4HNcs3ciuR
— News24 (@news24tvchannel) November 5, 2025
காயமடைந்த நிஹால், அடிபடாமல் இருக்க கைகூப்பி மன்னிப்புக் கேட்டும் அவர் விடவில்லை. ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்புகின்றனர். இந்த விவகாரம் வைரலான நிலையில் ரயில்வே அதிகாரிகள் இது பழைய காணொளி என்று கூறியுள்ளது ஆனாலும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
