மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு வினோதமான அறிக்கை உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற குடியரசுக் கட்சி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஈரானின் அடுத்த உச்ச தலைவராகத் தான் பொறுப்பேற்கும் யோசனையைத் தெஹ்ரான் நிர்வாகம் முறைசாரா முன்வைத்ததாகக் கூறியுள்ளார். “ஈரான் மக்கள் என்னை ஒரு தலைவராக விரும்புகிறார்கள், ஆனால் அந்தப் பதவி எனக்கு வேண்டாம் என நான் மறுத்துவிட்டேன்” என்று டிரம்ப் மேடையில் அதிரடியாக முழங்கியுள்ளார்.
ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தெஹ்ரான் அதிகாரிகள் ரகசியமாக வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் ராணுவத்தின் எதிர்ப்பு காரணமாக அதனை அவர்கள் வெளியே ஒப்புக்கொள்ளப் பயப்படுவதாகவும் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
#Watch | US President Donald Trump has claimed that the people of Iran want to make him their supreme leader, but according to him, he is not interested in taking the position
Read more: https://t.co/196xEQicsR pic.twitter.com/FN6D8hLFvw
— NDTV (@ndtv) March 26, 2026
“>
ஈரான் நிர்வாகம் டிரம்பின் இந்தக் கூற்றைத் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, போரை நிறுத்த அமெரிக்காவிற்கு 5 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. போர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற உறுதியான வாக்குறுதி போன்றவற்றை ஈரான் வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், ஈரான் ஒரு ‘அதிகார வெற்றிடத்தில்’ இருப்பதாகவும், எப்படியாவது ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர்கள் துடிப்பதாகவும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பற்றிப் பேசினாலும், மறுபுறம் அமெரிக்காவின் F-18 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் உரிமை கோருவது போன்ற முரண்பட்ட தகவல்களால் மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்ந்து போர்க்களமாகவே காட்சியளிக்கிறது.
