சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும், பார்ப்பவர்களைப் பதறவைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. அந்த வகையில், அஷி சிங்லா என்ற இளம்பெண் தனது புதிய ஐபோன் 17 மொபைலை அன்-பாக்சிங் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
பிளிங்கிட் செயலி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட அந்த விலையுயர்ந்த போன் கைக்கு வந்த மகிழ்ச்சியில், அவர் அந்தப் பெட்டியைப் பிரித்து போனை கையில் எடுத்த அடுத்த நொடியே, எதிர்பாராத விதமாக அது நழுவி கீழே விழுந்தது. அந்தத் தருணத்தில் அவரது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும், நிசப்தமும் பார்ப்பவர்களுக்குச் சிரிப்பையும் அதேசமயம் ஒருவித பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவின் பின்னணியில் ஒரு சோகமான கதையும் உள்ளது. அந்த இளம்பெண் இதற்கு முன்பு வைத்திருந்த ஐபோனை சந்தையில் தொலைத்துவிட்டதாகவும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகே இந்த புதிய போனை வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிளிங்கிட் டெலிவரி மிக வேகமாக இருந்தபோதிலும், போன் கீழே விழுந்த வேகம் அதைவிட அதிகமாக இருந்ததாக அவர் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். போன் கீழே விழுந்ததில் தனக்குச் சிறு சங்கடம் ஏற்பட்டாலும், புதிய போன் கிடைத்த திருப்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த எதார்த்தமான வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
