வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறது மத்தியக் குழு..

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வரும் திங்கள் கிழமை சென்னை வருகிறது. மத்திய அதிகாரிகள் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை துறை, உள்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் திங்கள் கிழமை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மழை வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளை ஆய்வு செய்கிறார்கள். இந்த மத்திய குழுவினருடன்தமிழக அரசின் குழுவினரும் சேர்ந்து பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை 2 நாட்கள் ஆய்வு நடத்தி செவ்வாய்க்கிழமை மாலை அவர்கள் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்திவிட்டு எவ்வளவு பாதிப்புகள் இருக்கிறது என்ற விவரங்களுடன் டெல்லி செல்வார்கள். டெல்லி செல்கின்ற உடன் மத்திய அரசு முக்கியமான தொகை ஒதுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை மத்திய குழு சென்னை வந்து இரண்டு நாட்கள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்துகின்றனர்.