அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 குழந்தைகளை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. அசாமில் ரெமல் புயல் பாதிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11  மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உட்பட 3 1/2 லட்சம் பேர் பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளை நீரில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக அசாம் மாநில பேரிட மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அசான், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாய் உள்ள இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.