
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த நிலையில் தற்போது கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன்படி சென்னை பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அந்தக் கொடியில் உள்ள சிறப்புகள் மற்றும் பாட்டில் உள்ள சிறப்புகள் குறித்து பார்ப்போம். அதாவது அந்த கொடியில் நடுவில் வாகை மலருடன் இரண்டு போர் யானைகள் நிற்கிறது.

அந்த கொடி பார்ப்பதற்கு சிவப்பு மஞ்சள் நேரத்தில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து போர்க்களத்திலிருந்து யானையில் வீரன் ஒருவன் இறங்கி வருவது போன்ற பாடல் அமைந்துள்ளது. அந்தப் பாடலில் ஜல்லிக்கட்டு காளை, புலி மற்றும் யானை போன்ற விலங்குகள் இருக்கிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏறுது, மக்கள் ஆசை நிஜமாகுது என்ற வரிகள் உடன் கட்சி பாடல் அமைந்துள்ளது. மேலும் இந்த பாடல் தற்போது இணையதளத்தில் படு வைரல் ஆகி வருகிறது.