
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ள வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதிய கணக்கு மூலம் சேமிக்க உதவும் திட்டம் தான் இது.
இந்த திட்டத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து கூட்டு வட்டியின் பயனையும் பெற முடியும். NPS வாத்சல்யாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச தொகை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆதார் அட்டை உள்ள 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த கணக்கை தொடங்க முடியும். லாகின் காலம் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் நீங்கள் 25 சதவீதம் தொகையை மூன்று முறை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். அதனைப் போலவே 2.5 லட்சத்திற்கும் மேலான தொகையில் 80 சதவீதம் தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
மொத்தத் தொகையில் 20% தொகையை ஒரே முறை எடுக்கும் வசதியும் உள்ளது. முதலீட்டாளர் ஒருவேளை இறந்து விட்டால் முழு தொகையும் பாதுகாவலர் பெயருக்கு மாற்றப்படும். இந்த தொகையை அப்படியே 60 ஆண்டுகள் வைத்திருக்கும் பட்சத்தில் 10% ஆண்டு வருமானத்தை சேர்த்து மொத்தம் 2.75 கோடி கணக்கில் இருக்கும். குறைந்த முதலீட்டில் அதிகம் சேமிக்க வேண்டும் என்று விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள். வங்கியில் மற்றும் தபால் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.