மக்களைப் பதறவைக்கும் வகையில், ஒரு கோபமடைந்த காளை காரைத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், “காளையின் வலிமை நெஞ்சை உறைய வைக்கிறது!” என வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ, மெக்சிகோவின் குவாடலஜாரா நகரிலுள்ள ஒரு சாலையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமூக ஊடக தளமான ரெடிட்டில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு வெறித்தனமான காளை சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை திடீரென தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
1 நிமிடம் 40 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோவில், ஒரு காளை திடீரென ஒரு கருப்பு காரை நோக்கி ஓடி சென்று, தனது முழு சக்தியையும் பயன்படுத்தி காரைத் தள்ளத் தொடங்குகிறது. காளையின் வலிமையால், கார் ஒரு பொம்மைப் போல் நகர்கிறது. கடைசியில், அந்தக் கார் சுவரில் மோதி பெரிதும் சேதமடைகிறது. அதன் பின்பும், காளையின் கோபம் குறையாமல், தொடர்ந்து காரைத் தாக்குகிறது. இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பெரும்பாலானோர், “இவ்வளவு வலிமையா ஒரு காளைக்கு?” என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். வீடியோவில் காளையின் வலிமையின் தாக்கத்தில் கார் சேதமடைந்து காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சிலர் அந்த விலங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனக்கூட கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதோ அந்த வீடியோ,
Raging bull wrecks someone's parked Car.
byu/H1gh_Tr3ason ininterestingasfuck
