தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக கடந்த 6-ம் தேதி இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படம் வெளியாக 21 நாட்களில் தற்போது 1705 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் வெகு விரைவாக புஷ்பா 2 திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தார். இந்த விவகாரம் இன்னும் தெலுங்கு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும் வெகுவிரைவில் 2000 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
