
இங்கிலாந்து நாட்டில் கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டுவதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகின்றது. அப்பொழுது பள்ளத்தினுள் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட 3 அடி நீளம் கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டவுடன் போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு வளைவுத்திற்குள் கொண்டு வந்து குண்டை பத்திரமாக செயல் இழக்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
மேலும் 400 கிலோமீட்டர் எல்லைக்குள் இருக்கும் மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். இந்த நிலையில் வெடிகுண்டை செயலிழக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்து சிதறி உள்ளது. இதனால் அப்பகுதி அதிர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.