இன்றைய நவீன உலகத்தில் பலரும் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி உண்ணும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இதில் சிறு சிறு தவறுகளும் சமீப காலங்களாக நடப்பது வழக்கமாகியுள்ளது. இதேபோன்று zomato மூலம் நபர் ஒருவர் ஒரு வெஜ் பிரியாணி மற்றும் ஒரு நான்வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

அதன்பின் தரப்பட்ட உணவு பார்சலில் ஒன்று சரியாக சிக்கன் பிரியாணி இருந்ததாகவும், மற்றொன்றில் வெஜ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளே நான் வெஜ் பிரியாணி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மும்பையில் உள்ள “த பிரியாணி லைஃப்” என்ற பிரபல உணவகத்தில் வெஜ் பிரியாணி மற்றும் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு தவறாக அனுப்பப்பட்ட உணவு பொட்டலங்கள் குறித்த வீடியோவிற்கு zomato நிறுவனம் பதில் அளித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by The Biryani Life (@thebiryanilife)

இதில், இதுபோன்ற தவறு நடந்து இருக்கக் கூடாது பாதிக்கப்பட்டவர் தங்களின் ஐடியை டைரக்ட் மெசேஜ் செய்யவும் என்ன தவறு நடந்தது என்பதை சரி பார்க்கிறோம் என பதில் அளித்துள்ளனர். இதேபோன்று இதற்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அழிகார் பகுதியில் பெண் வழக்கறிஞர் ஒருவர் zomatoவில் வெஜ் உணவு ஆர்டர் செய்தபோது அவருக்கு நான் வெஜ் பீட்சா மற்றும் பாஸ்தா வந்ததாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்திருந்தார்.

இதுபோன்ற தவறுகளுக்கு அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப் போவதாகவும் அந்தப் பெண் தெரிவித்து இருந்தார். தற்போது இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகில் வருவதால் பயனர்கள் பலரும் உணவு பாதுகாப்பு மற்றும் அதன் வகைகளை தெளிவுபடுத்துவதில் zomato நிறுவனம் அதை கவனம் செலுத்தவில்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.