இந்தியாவில் இருந்து வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4,343 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 16.3 சதவீதம் அதிகம் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் டிசம்பர் மாதத்தில் மட்டும் வெங்காயம் ஏற்றுமதி இரு மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “வெங்காய ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ இல்லை. மேலும் வெங்காயத்தின் தற்போதைய ஏற்றுமதி கொள்கை தாராளமானது. வெங்காய விதை ஏற்றுமதி மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. வெட்டப்பட்ட துண்டுகளாகப்பட்ட அல்லது பொடி வடிவில் அரைக்கப்பட்ட அனைத்து வகை வெங்காயம் மற்றும் பெங்களூர் ரோஸ் வெங்காயம், கிருஷ்ணாபுரம் வெங்காயம் போன்றவற்றிற்கு வெட்டப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் தடை என்பதிலிருந்து விலக்களித்து  தாராளமாக என திருத்தப்பட்ட அரசு ஏற்றுமதி கொள்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.