நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணையை கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி வெளியிட்டார்.நாடு முழுவதும் உள்ள எட்டு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் தலா 2000 ரூபாய் வீதம் மொத்தம் 16 ஆயிரத்து 800 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று beneficiary status என்பதை கிளிக் செய்து பணம் வந்து உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.