சிம்புவின் பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் மற்றும் கலையரசன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான முப்ஃதி என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக பத்து தல திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் டீசரும் வெளியானது.

இந்நிலையில் ‘பத்துதல’ படத்தின் FDFS காட்சிக்கு ஹெலிகாப்டரில் வருவேன் என்று கூல் சுரேஷ் கூறியுள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் சிம்பு படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய தொடங்கி சமூக வலைதளங்களில் பிரபலமானார். தற்போது அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு, தியேட்டர் வாசலில் அவருடைய பாணியில் பேசி வருகிறார். இந்நிலையில் பத்துதல படத்தை பார்க்க, வீட்டை வித்தாவது ஹெலிகாப்டரில் வருவேன் என்று கூறியுள்ளார்.