நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் வாங்குவோருக்கு நிவாரணத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான செயலாக்க கட்டணத்தில் 50 முதல் 100 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகையான வீட்டுக் கடன்களுக்கும் எந்த சலுகை பொருந்தும். இந்த சலுகை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் வீட்டு கடன்களுக்கான செயலாக கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை பொருந்தக்கூடிய ஜி எஸ் டி உடன் தள்ளுபடி கிடைக்கும். செயலாக்கம் கட்டணம் என்பது நீங்கள் வீட்டு கடன் வாங்கும் போது வங்கியில் செலுத்தப்படும் ஒரு முறை கட்டணமாகும். எஸ்பிஐ வங்கியின் செயலாக்கம் கட்டண தள்ளுபடி உங்கள் வீட்டுக் கடனில் பணத்தை சேமிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். எனவே இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.