
உத்தர பிரதேசத்தின் பிஜனோர் மாவட்டத்தில் 22 வயதான ஒரு பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அதை வீடியோ எடுத்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அந்தப் பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் தன்னை வீட்டிலிருந்து கடத்திச் சென்று, ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மேலும் அதை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் பாதிக்கபட்ட பெண் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் அந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.