
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டலாவில் பழங்குடியின பகுதியான பைன்வாகி அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக சிலர் மாடுகளை இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது அவர்கள் இறைச்சிக்காக மாடுகளை வளர்த்தது உறுதி செய்யப்பட்டது. அதோடு அவர்களின் வீட்டில் பிரிட்ஜில் மாட்டிறைச்சி இருப்பது தெரியவந்தது.
இதனால் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் மற்ற 10 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். அதன் பிறகு அந்தப் பகுதியில் உள்ள 11 பேரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள 11 வீடுகளையும் புல்டோசர் மூலம் காவல்துறையினர் இடித்து தள்ளினர். அங்கு 150 பசுக்கள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டது தெரிய வந்த நிலையில் பசுக்களை மீட்டனர். மேலும் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக முஸ்லிம்கள் மாடுகளை வளர்த்து வந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான 11 வீடுகளும் இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.