ஜம்மு & காஷ்மீர் மாநிலம் கத்துவ மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வீட்டில் வாடகைக்கு 10 பேர் வசித்துள்ளனர். இந்த 10 பேரில் 2 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மீதம் இருந்த நான்கு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயினால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.