உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் பெக்தா ஹாஜிபூர் என்ற பகுதி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீயில் சிக்கி 7 மாத குழந்தை, 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு ஒரு குழந்தை மற்றும் பெண் உட்பட இருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..