இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று ஆதார அமைச்சகம் உத்தரவிட்டு உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தங்களுடைய சுய விவரங்களை ஆதார் கார்டில் இலவசமாக மாற்றிக் கொள்ள டிசம்பர் 14 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது 2024 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஆதார் கார்டு அப்டேட் செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முதலில் https://www.uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று “update your aadhaar”  என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் “update demographics data online.” என்பதை தேர்ந்தெடுத்து ஆதார் எண்ணை உள்ளிட்ட கேப்சாவை பதிவிட வேண்டும்.

அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை  பதிவிட வேண்டும்.

அடுத்ததாக மாற்றப்பட வேண்டிய விவரங்களை உள்ளிட்டு அதற்குரிய ஆவணத்தையும் அப்லோடு செய்ய வேண்டும். இறுதியாக உங்களுடைய விவரங்கள் ஆதார் கார்டில் அப்டேட் ஆகிவிடும்.