
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது எஸ்பிஐ அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததால் கடனுக்கான தவணைத் தொகை அதிகரிக்கும். ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள் மற்றும் லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வங்கியும் MCLR விகிதத்தை மாற்றி அமைக்கின்றன. இந்த விகிதத்தை பொறுத்து வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகின்றது.