இந்திய கிரிக்கெட் வீரரான பிருத்வி ஷா, சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தற்போது ரஞ்சி டிராபி தொடர் முன்னோட்டமாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், அவர் மீண்டும் சண்டை சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
மும்பை அணியில் இருந்து மகாராஷ்டிரா அணிக்கு மாறிய ஷா, தனது பழைய அணி வீரர்களிடம் விரக்தி காட்டினார். இந்த போட்டியில் அவர் அபாரமாக ஆடி 181 ரன்கள் விளாசினார். ஆனால் அவர் வெளியேறிய பிறகு, முஷீர் கான் என்ற பந்துவீச்சாளரிடம் சென்று வாதத்துக்குப் பிறகு பேட்டை தூக்கி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த மும்பை வீரர்கள், அம்பயர்கள் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Heated exchange between Prithvi Shaw and Mumbai players after his wicket! pic.twitter.com/l9vi1YgeYs
— INSANE (@1120_insane) October 7, 2025
“>
பிருத்வி ஷா இதற்கு முன்னும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு யூடியூபருடன் சாலையில் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. அந்த சம்பவத்திற்காக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க அவர் முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் இத்தகைய தகராறுகள் அவரது மதிப்பையும், மீண்டும் தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
