மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே மழலை மாறாத சிறுமி ஒருவருக்கு நேர்ந்த விபத்து, பார்ப்பவர் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

சாலை ஓரத்தில் தனது குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்த அந்தச் சிறுமி, சாலையில் எதோ ஒரு பொருளை எடுப்பதற்காகவோ அல்லது யாருக்கோ உதவி செய்வதற்காகவோ ஒரு அடி முன்வைத்துள்ளார். அந்த விநாடியே எமதூதனாக வந்த அதிவேக இருசக்கர வாகனம் ஒன்று அந்தச் சிறுமி மீது பயங்கரமாக மோதியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், அந்தச் சிறுமி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அலறியடித்துக் கொண்டு ஓடிவந்த குடும்பத்தினர் அந்தப் பிஞ்சைக் காப்பாற்ற முயன்றும், பலனின்றி அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உதவி செய்ய வேண்டும் என்ற அந்த நல்ல எண்ணமே அந்தச் சிறுமிக்கு வினையாக முடிந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் அப்பாவி உயிர்கள் பலியாவதற்கு இதுவே சாட்சி என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி, அனைவரது கண்களையும் குளமாக்கி வருகிறது.