பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Owen L என்ற 20 வயது வாலிபர் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபர் வீடியோ கேமில் தோல்வி அடைந்த நிலையில் அவருடன் சேர்ந்து விளையாடியவர் வாலிபரை கிண்டலடித்துள்ளார். இதனால் அந்த வாலிபர் அந்த கோபத்தை யார் மீதாவது காட்ட முடிவு செய்தார். அந்த சமயத்தில் Louise Lasalle என்ற 11 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அந்த சிறுமியை வாலிபர் ஏமாற்றி ஒரு வனப்பகுதிக்கு அழைத்து சென்று அவரிடம் இருந்த பணத்தை திருட முயன்றார்.

இதனால் சிறுமி பதட்டத்தில் அந்த வாலிபரை கீழே தள்ளிவிட அவர் கோபத்தில் கத்தியால் சிறுமியை குத்தி கொலை செய்தார். அந்த சிறுமி பள்ளி முடிந்து நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சுமார் 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் உடைகளை ப்ளீச்சில் வாலிபர் மூழ்கடித்து குப்பையில் வீசியதோடு கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் தூக்கி வீசி விட்டார். மேலும் அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவருடைய காதலியையும் கைது செய்துள்ளனர்.