தாய்லாந்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிர்ச்சிகரமான பாராசெயிலிங் விபத்து தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுக்காலத்தைக் கொண்டாடுவதற்காகத் தாய்லாந்து சென்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியுடன் பாராசெயிலிங் விளையாட்டில் ஈடுபட்டபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது.
வானில் பறந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பாதுகாப்பு உபகரணமான ஹார்னஸ் உடைந்ததால், சுமார் 100 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
पैसे के साथ खरनाक शौक अक्सर जानलेवा साबित होता है ।😲😲
यह कहावत मशहूर ऑस्ट्रेलियन उद्योगपति जॉन हसी पर सही बैठती है, पैराग्लाइडिंग के दौरान थाईलैंड में 30 मीटर की ऊंचाई से गिरने पार्लाइज़ हो गए है।
इस घटना को हसी की पत्नी ने अपने कैमरे में कैद किया है।👀👀👇👇…
— Falcon Eyes 👀 News (@falconeyes01) July 14, 2026
கடற்கரையில் நின்றபடி தனது கணவர் பாராசெயிலிங் செய்வதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மனைவி, கண் முன்னே நடந்த இந்த விபத்தைக் கண்டு நிலைகுலைந்து போனார்.
இந்த பழைய சம்பவம் குறித்த வீடியோ, தற்போது சமீபத்தில் நடந்த நிகழ்வு போலப் பகிரப்பட்டு வருவதால், சுற்றுலாத் தலங்களில் உள்ள சாகச விளையாட்டுகளின் பாதுகாப்பு குறித்துப் பலரும் மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க, சுற்றுலாப் பயணிகள் உரிமம் பெற்ற நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதோடு, பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
