தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களை விட தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் 14 பாலங்களை கட்டுவதற்கான டெண்டர் பணிகளை உடனடியாக தொடங்கும்படியும் விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாகவும் சிறுபான்மை குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதாவது சிறுபான்மை குடும்பத்தினருக்கான ஒரு லட்சம் நிதி உதவி வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் தெலுங்கானா மாநிலத்தில் 99 ஆயிரத்திற்கும் குறைவாக பயிர் கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அடுத்த 15 நாட்களுக்கு பிறகு ஒரு லட்சத்திற்கும் மேல் பயிர் கடன் பெற்றவர்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.