சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திடுக்கிடும் வீடியோவில், நபர் ஒருவர் கொடிய விஷமுள்ள பல பாம்புகளை வெறும் கயிறுகளைப் போல சாதாரணமாகத் தனது கைகளில் ஏந்தி விளையாடுவது பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. மைக் ஹோல்ஸ்டன் எனும் விலங்கு ஆர்வலர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ஏராளமான பாம்புகள் அவர் உடலில் சுற்றிக் கொண்டிருந்தாலும், அவர் எவ்வித அச்சமுமின்றி புன்னகையுடன் அவற்றைக் கையாள்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்புகளைப் பார்த்தாலே அலறியடித்து ஓடும் மக்களுக்கு மத்தியில், அவற்றை பொம்மைகளைப் போல விளையாட்டுக் காட்டும் இந்த நபரின் துணிச்சலான செயல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவிற்கு சமூக வலைதளப் பயனர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் சமமாக எழுந்துள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

“>

இருப்பினும் சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த காட்சியில், அந்த நபர் ஒரு தொழில்முறை நிபுணராகத் தெரிந்தாலும், இது போன்ற ஆபத்தான செயல்களைப் பொதுவெளியில் பகிர்வது மற்றவர்களைத் தவறாக வழிநடத்தும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு சிறிய தவறு கூட உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், முறையான பயிற்சியின்றி இதுபோன்ற அபாயகரமான உயிரினங்களுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இது போன்ற சாகசங்கள் உயிருக்கே உலை வைக்கும் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.