
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 வயது சிறுமி விபத்தில் சிக்கி வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேராகி வருகிறது. அந்த வீடியோவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஓடி வருகிறது. அப்போது எதிரே வந்த ஆட்டோ டிரைவர் இடது புறமாக சிறுமி வருவதை கவனிக்கவில்லை.
இதனால் ஆட்டோ மோதி கீழே விழுந்த 3 வயது சிறுமியின் மீது ஆட்டோ சக்கரங்கள் ஏறி இறங்கியது. சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் சுதாரித்துக் கொண்டார் டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தார்.
ராமநாதபுரம்: வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மீது ஆட்டோ ஏறி இறங்கி விபத்துக்குள்ளானதில் சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழப்பு#Ramanathapuram | #Accident | #CCTV | #Child pic.twitter.com/RQF5sNV6DQ
— PttvOnlinenews (@PttvNewsX) July 5, 2025
இதனையடுத்து காயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மீது ஆட்டோ ஏறி இறங்கிய சிசிடிவி காட்சிகள் காண்போர் மனதை கலங்க வைக்கிறது.