புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள, புதிய மின்சார ரயில் இன்ஜினை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாரம்பரியமும், புதிய தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்த புதிய முயற்சியாக, புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் மூன்று மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். அதுமட்டுமினர் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படும். இதனால் பொதுமக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.