Samsung Galaxy S23 Series  நடப்பு ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் நிறுவனம் இப்போனை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவியது. இந்த மாடல் Exynos SoCக்கு மாற்றாக Qualcomm Snap dragon 8 Plus Gen 1 SoC வாயிலாக இயக்கப்படும். ரெண்டர்கள் Galaxy A54 மற்றும் Galaxy S23 FE போன்றவைக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமைய காட்டுகிறது. முந்தைய “FE” மாடலில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டால், இது பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் பாடி கலவையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மொபைல் மெமரியை பொறுத்தவரையிலும்  நீங்கள் 6 gp (அ) 8gp RAM மற்றும் 128 ஜிபி (அ) 256ஜிபி இன்டர்நல் மெமரி விருப்பங்களை கொண்டிருக்கலாம். அதோடு கேலக்ஸி S23 FE பிளாட் Display மற்றும் பின்புறமானது 3 கேமராக்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஃபோன் 4500 mAh பேட்டரி உடன் 25W சார்ஜிங் மற்றும் AMOLED டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.