கம்பீர் தனது உன்னதத்தை காட்ட விரும்பினால், விராட் கோலியை அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஹ்மத் ஷெசாத் தெரிவித்துள்ளார்..

லக்னோ மற்றும் பெங்களூர் இடையே 2023 ஐபிஎல் போட்டியின் போது கோலி மற்றும் லக்னோவின் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முந்தைய ஆட்டத்தில் கம்பீரின் சைகையால் பெங்களூரு வீரர்கள் இந்தப் போட்டியில் ஆக்ரோஷமாக இருந்தனர். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கை முறைத்துப் பார்த்து பீல்டராக இருந்த விராட் கோலி பந்தை பிடித்து ஆக்ரோஷம் காட்டினார்.

போட்டி முடிந்ததும் அமைதியாகி விடும் என எதிர்பார்க்கப்பட்ட சம்பவம் மைதானத்திற்கு அப்பாலும் தொடர்ந்தது. போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது நவீன் மற்றும் கோலி இருவரும் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டனர். லக்னோவின் மென்டார் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கோலி மற்றும் கம்பீர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. கோலி, கம்பீர் மற்றும் நவீன்-உல்-ஹக் உள்ளிட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் இறுதி வரை இந்த சம்பவம் பேசுபொருளாக இருந்தது.

விராட் கோலியிடம் கெளதம் கம்பீர் மன்னிப்பு கேட்க வேண்டும்!

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஹ்மத் ஷெசாத் தனது அறிமுக ஆட்டத்தில் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டார். விராட் கோலி உடனான தனது உறவு குறித்து நாதிர் அலி போட்காஸ்டில் அகமது ஷெஹ்சாத், “நாங்கள் இருவருக்கும் பரஸ்பர மரியாதை உண்டு. கிரிக்கெட்டில் எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் அவரிடம் கேட்பேன். எல்லாவற்றையும் என்னிடம் அன்பாகச் சொல்வார். விராட் கோலியை சிறந்த வீரராக மதிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை புதிய உயரத்திற்கு விரைவாக அழைத்துச் சென்றார். இவ்வளவு சீக்கிரம் ஒரு மாற்றம் ஏற்படுவதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. அவரது சிறந்த பேட்டிங் இன்னும் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்” என்று பாராட்டியிருந்தார்.

இதற்கிடையில் விராட் கோலி மற்றும் கம்பீர் இடையேயான மோதல் குறித்து அகமதுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பாருங்கள், இதற்கு பதில் சொல்வது என் வேலையல்ல. ஆனால் நீங்கள் என்னிடம் கேட்பதால் என் கருத்தைச் சொல்கிறேன்.ஒருவேளை என் கருத்து தவறாக இருக்கலாம். வெளியில் இருந்து விஷயத்தைப் பார்க்கும்போது, ​​கம்பீரின் தவறு என்று நினைக்கிறேன். ஒருவேளை கம்பீர் தனது உன்னதத்தை காட்ட விரும்பினால், விராட் கோலியை போனில் அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கம்பீர் மன்னிப்பு கேட்டால், அவரை பெரிய மனிதராக ஏற்றுக்கொள்கிறோம்!

அணி நிர்வாகத்தின் உறுப்பினர் ஒரு வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை என்று கூறிய அகமது, விராட் கோலி மன்னிப்பு கேட்டால் கம்பீர் பெரிய மனிதர் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

மேலும் பேசுகையில், “வெளியில் இருந்து பார்த்தால், கம்பீரின் செயல் மோசமாக இருந்தது. எனது வாழ்நாளில் ஒரு அணியின் நிர்வாக உறுப்பினர் வீரர்களுக்கு இடையே சண்டையில் குதிப்பதை நான் பார்த்ததில்லை. ஒருவேளை விராட் கோலியிடம் கம்பீர் மன்னிப்பு கேட்டால், அவர் பெரிய மனிதராக செயல்படுகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அவர் விராட் கோலியை எவ்வளவு நேசிக்கிறார் மற்றும் அவருக்கு எப்படி முதல் ஆட்டநாயகன் விருதை வழங்கினார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

2009ல், ஈடன் கார்டனில் இலங்கைக்கு எதிராக 150 ரன்கள் எடுத்ததற்காக கவுதம் கம்பீர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆனால் போட்டியில் மேலும் ஒரு சதம் அடித்த விராட் கோலிக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று கம்பீர் கோரிக்கை விடுத்தார்.அதன்பின், தனது முதல் சர்வதேச சதத்தை (107 ரன்கள்) அடித்த விராட் கோலி முதல் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன்பின் பேசிய கம்பீர், ஒரு வீரர் தனது முதல் ஆட்ட நாயகன் விருதை பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இது அவரது முதல் சர்வதேச சதமாக இருக்கும் போது அது சிறப்பாக இருக்கும் என்றும், நாங்கள் வெற்றிபெறும் அணி என்றும் கூறினார்.