
ICC 2024 டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி பெரிய ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இது குறித்து பேசி உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், விராட் கோலி இடம் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய ஸ்டிரைக் ரேட் பற்றி அதிகமாக பேசப்பட்டது.
இருந்தாலும் கடந்த ஐபிஎல் தொடரில் அதை அவர் முற்றிலுமாக மாற்றி விட்டார். ஆனால் அவர் டி20 உலக கோப்பையிலும் அதே மனநிலையுடன் விளையாட வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.